கண்மாய்-ஏரி மீனுக்கு வந்த திடீர் 'மவுசு'
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ. 4 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதை தடுத்து நிறுத்தக் கோரியும், கடத்திச் செல்லப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கச்சத்தீவு அருகே இலங்கை அரசு கடலில் போட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதியிருந்து 3,000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான இயந்திரப் படகுகளும், நாட்டுப் படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் இந்த தொடர் போராட்டத்தால் 10,000 மீனவர் குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசைப் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வாரத்திற்கு 3 முறை செல்வார்களாம். ஸ்டிரைக்கால் மீன்வரத்து சுத்தமாக இல்லாததால், கொச்சி, தூத்துக்குடி, சென்னை துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பறவைக் காய்ச்சல் பீதி தமிழகத்தில் இருப்பதால் அனைவரும் மீன்களை நாடி செல்கின்றனர். ஆனால் தற்போது மீன்வரத்து இல்லாததால் ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை மீன் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
மீனவர்களின் இந்த போராட்டம் குறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள படகு உரிமையாளர்கள், முகவர்கள், தொழிலாளிகள், படகு மெக்கானிக்குகள் அனைவரும் பெரும் சோகத்துடன் உள்ளனர்.
இந்த ஸ்டிரைக்கால் ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் மீனவர்கள் போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications