நீதிபதி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்
கோவை: கோவையில் சிபிஐ நீதிபதியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக ரங்கராஜ் பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து கோவைக்கு இட மாறுதல் செய்யப்பட்டார்.
இந் நிலையில் இவருக்கு கடந்த 28 ம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு வழக்கு தொடர்பான விசாரணையை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் உள்ள உங்களது குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கடிதத்தில், கே.ராஜமாணிக்கம், 44, பஜார் வீதி,பொன்னேரி, செங்கை மாவட்டம் என முகவரி எழுதப்பட்டிருந்தது.
கடித்ததை படித்த உடன் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் வழக்கு பதிவு செய்தார். மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications