பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது!
டெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்கு பெட்ரோலியத் துறை பரிந்துரை செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் சட்டசபைத் தேர்தல்கள் குறுக்கிட்டதால் விலை உயர்வை அறிவிக்காமல் இருந்து வந்தது மத்திய அரசு. ஆனால் தற்போது நிலைமை மேலும் மோசமாகி வருவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தியாக வேண்டும் என மத்திய அரசை எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் இன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழு கூடி ஆலோசித்தது. இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்கு பெட்ரோலியத்துரை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த விலை உயர்வு குறித்து முடிவு செய்ய அடுத்த வாரத்தில் அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் விலை விலை உயர்வுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
இனி நிறுத்த முடியாது.. தக்காளி, வெங்காயம், காய்கறி விலை உயர போகுது.. இடியை இறக்கும் அறிவிப்பு! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications