புளோரிடா வாக்கெடுப்பில் ஹில்லாரி வெற்றி

வாஷிங்டன்: புளோரிடா மாகாணத்தில் நடந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான முதன்மை வாக்கெடுப்பில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மீண்டும் அவரது கை ஓங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய முதன்மை வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹில்லாரி கிளிண்டனுக்கும், பாரக் ஓபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
ஹில்லாரி இதுவரை நியூ ஹாம்ப்ஷயர், நிவேதா ஆகியவற்றில் வெற்றி பெற்றிருந்தார். அயோவா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் ஓபாமா வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்ன் மற்றும் மிட் ரோம்னிக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருவரும் தலா 3 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், புளோரிடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சிக்கான முதன்மை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஹில்லாரி கிளிண்டன் அபார வெற்றி பெற்றார்.
ஹில்லாரிக்கு 50 சதவீத வாக்குகளும், ஓபாமாவுக்கு 33 சதவீத வாக்குகளும், ஜான் எட்வர்ட்ஸுக்கு 14 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
ஹில்லாரிக்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளை அமெரிக்கர்களும், வெளிநாட்டு அமெரிக்கர்களும்தான்.
இதற்கிடையே, தொடர்ந்து 3வது இடத்திலேயே இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் எட்வர்ட்ஸ் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளார். நியூ ஆர்லியான்ஸில் நடைபெறவுள்ள பிரசாரத்தின்போது இந்த முடிவை அவர் அறிவிக்கவுள்ளார்.
எட்வர்ட்ஸுக்கு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை வெள்ளை அமெரிக்கர்கள் மத்தியில்தான் ஆதரவு அதிகம் உள்ளது. எனவே அவர் போட்டியிலிருந்து விலகினால் அது ஓபாமாவுக்கு சாதகமாகலாம் என கருதப்படுகிறது.
புளோரிடாவில் ஜான் மெக்கெய்ன் அபார வெற்றி:
இதற்கிடையே புளோரிடா மாகாண குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் ஜான் மெக்கெய்ன் அபார வெற்றி பெற்றார். அவருக்கு 36 சதவீத வாக்குகளும், ரோம்னிக்கு 31 சதவீத வாக்குகளும், ரூடி ஜியுலியானிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து ஜான் மெக்கெய்னுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ரூடி ஜூலியானி தெரிவித்துள்ளார்.
அடுத்து பிப்ரவரி 5ம் தேதி 22 மாகாணங்களுக்கு ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. சூப்பர் செவ்வாய் எனப்படும் இந்த நாளில் நடைபெறும் வாக்கெடுப்பின் இறுதியில் இருகட்சிகளின் சார்பிலும் அடுத்து யார் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications