யுஎஸ்-இன்டல் திறனறிவு போட்டியில் 7 இந்திய மாணவர்கள்
நியூயார்க்: இன்டல் நிறுவனத்தின் 2008ம் ஆண்டுக்கான அறிவியல் திறனறிவுப் போட்டியின் இறுதிச் சுற்றில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் 7 பேர் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 40 மாணவர்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ளனர்.
ஜூனியர் நோபல் பரிசு என அழைக்கப்படும் இந்த அறிவியல் திறனறிவுப் போட்டி அமெரிக்காவின் மிகப் பழமையான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் இது பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தற்போது 40 பேர் முன்னேறியுள்ளனர். அவர்களில் 7 பேர் அமெரிக்க இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்று மார்ச் மாதத்தில் ஒரு வார காலம் வாஷிங்டன் நகரில் நடைபெறும். இதில் முதலிடத்தைப் பிடிக்கும் மாணவருக்கு, இன்டல் நிறுவனம் 1 லட்சம் டாலர் கல்வி-ஆராய்ச்சி உதவித் தொகையை வழங்கும். மேலும் இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ள 40 பேருக்கும் தலா 5,000 டாலர் உதவித் தொகை மற்றும் ஒரு லேப்டாப் பரிசாக அளிக்கப்படும்.
அமெரிக்காவின் 19 மாநிலங்களைச் ேசர்ந்த 35 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதிகபட்சமாக நியூயார்க்கிலிருந்து 15 பேர் இடம் பெற்றுள்ளனர். பென்சில்வேனியாவிலிருந்து 4 பேரும், டெக்சாஸிலிருந்து 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய மாணவர்கள் விவரம்:
அவந்தி ராகவன் (ஓர்லான்டோ-புளோரிடா), ஷ்ராவனி மிக்கிலினேனி (ப்ளூம்பீல்ட்-மிச்சிகன்), ஹம்சா ஸ்ரீதர் (கிங்ஸ்பார்க்-நியூயார்க்), அசோக் சந்திரன் (நெஸ்கான்சட்-நியூயார்க்), ஷிவானி சுட் (துர்ஹாம்-நார்த் கரோலினா), இஷா ஜெயின் (பெத்லகேம்-பென்சில்வேனியா), வினய் வெங்கடேஷ் ராமஷேஷையா (போர்ட் ஒர்த்-டெக்ஸாஸ்).
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications