ஹைதராபாத்- டி.ஐ.ஜியை சுட்டுக் கொன்ற சிஆர்பிஎப் வீரர்
ஹைதாராபாத்:ஹைதராபாத்தில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முகாமில், விடுமுறை தர மறுத்த டிஐஜியை வீரர் சுட்டுக் கொன்றார்.
சன்ராயனகுட்டா என்ற இடத்தில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை(சி.ஆர்.பி.எப்) அலுவலகத்தில் கூடுதல் டி.ஐ.ஜியாக சையத் சிராஜூதீன் கான் பணிபுரிந்து வந்தார்.
இந்த முகாமில் பணியாற்றி வரும் வீரர் ஹனுமந்த ராவ்(30) டி.ஐ.ஜி கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த கான் உடனடியாக ஒஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கான் இறந்தார்.
இதையடுத்து ஹனுமந்த் ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது சொந்த ஊருக்கு செல்ல விடுமுறை கேட்டதாகவும், அது மறுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் கானை சுட்டு கொன்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை அலுவலக வளாகத்திற்குள் பத்திரிகையாளர்கள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications