தமிழில் கையெழுத்து அதிகாரிகளுக்கு டிஜிபி எச்சரிக்கை!
மதுரை: அலுவலக ஆவணங்களில் தமிழில் கையெழுத்திடாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறை அதிகாரிகள் அலுவலகம் சம்பந்தப்பட்ட கோப்புகளில் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதுகுறித்து அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தபோது போலீஸ் துறையில் உள்ள பல அதிகாரிகள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டது தெரியவந்தது.
வட மாநில அதிகாரிகள் பலர் தமிழில் கையெழுத்திட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வருவது தெரியவந்தது.
இது குறித்த தகவல்களை டி.ஜி.பி. ராஜேந்திரன் கவனத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி. ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு சில மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் அரசாணையை மீறி ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வருகிறீர்கள். இனி வரும் காலத்தில் தமிழில் மட்டுமே கையெத்திட வேண்டும். தமிழில் கையெழுத்திட தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபப்டும் என தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications