தடையை மீறி ஆர்ப்பாட்டம்-முன்னாள் பாஜக அமைச்சர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும், பேருந்து நிலையத்திலும் நடந்த குண்டு வெடிப்புகள் சம்பவத்திலும் சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜபாண்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தாலுகா அலுவலகம் முன் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி அங்கு எஸ்.பி. ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 120 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications