மதுரை மாநில மாநாடு: தொண்டர்களுக்கு சரத் அழைப்பு
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டுக்கு அலை கடலென தொண்டர்கள் மதுரைக்குத் திரண்டு வர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு, மதுரையில் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மதுரை அருகே விரகனூரில் ரிங் ரோடு பகுதியில் இதற்காக பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 10ம் தேதி தொடங்கும் மாநாட்டின் தொடக்கமாக கட்சித் தலைவர் சரத்குமார் கட்சிக் கொடியேற்றி வைக்கிறார்.
அதன் பின்னர் கவியரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சரத்குமார் படப் பாடல்கள் பாடப்படவுள்ளன.
முதல் நாள் மாநாட்டின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சரத் கட்சியில் இணையும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
சில முக்கிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டின்போது தனது கட்சியில் இணையவுள்ளதாக சரத் எதிர்பார்க்கிறார்.
மாநாட்டுக்கு கட்சித் தொண்டர்கள் அலை கடலென திரண்டு வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications