தேமுதிக நிர்வாகி குடும்பத்தை தத்தெடுத்த விஜயகாந்த்
சென்னை: விருத்தாச்சலம் நகர தேமுதிக ஒன்றிய செயலாளர் லெனின் மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கட்சித் தலைவர் விஜயகாந்த் அந்தக் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார். லெனின் மனைவி பெயரில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்ததோடு, அவரது இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார்.
விருத்தாச்சலம் நகர தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் லெனின், சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதையடுத்து விஜயகாந்த் தனது மனைவியுடன் விருத்தாச்சலம் விரைந்தார்.
நேற்று விஜயகாந்த்துக்கு திருமண நாள். மேலும் சட்டசபையில் அவர் கேட்ட கேள்வியும் விவாததிற்கு நேற்று வந்தது. இருப்பினும் அவற்றை புறம் தள்ளிய விஜயகாந்த், விருத்தாச்சலத்திற்கு விரைந்தார்.
லெனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், ஈமச்சடங்கிற்காக ரூ.10,000 கொடுத்தார். மறைந்த லெனின் மனைவி பெயரில் ரூ. 1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்தார். அவரது 2 குழந்தைகள் தாங்கள் விரும்புகிற வரை, விரும்பும் படிப்பினை படிக்க பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications