பஹ்ரைன் அருகே கவிழ்ந்த இந்திய கப்பல்-ஊழியர்கள் மீட்பு
மனாமா: பஹ்ரைன் அருகே நடுக்கடலில் இந்தியக் கப்பல் கவிழ்ந்தது. அதிலிருந்த 17 ஊழியர்களையும் மாலுமிகளையும் அந் நாட்டு கடேலாரக் காவல்படை மீட்டது.
குஜராத்தைச் சேர்ந்த அந்த கப்பலான சித்நாத் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அரிசி ஏற்றிக் கொண்டு இராக்குக்கு சென்று கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று இந்தக் கடல் பகுதியில் ராட்சத அலைகள் எழுந்தன. இதில் அந்தக் கப்பல் தடுமாறியது.
உதவி கோரி எஸ்.ஓ.எஸ். அவரச சமிஞையை அனுப்பிய அந்தக் கப்பல் சிறிது நேரத்தில் கவிழ்ந்தது.
கப்பலில் இருந்து வந்த அவசர சிக்னலை வைத்து பஹ்ரைன் நாட்டு கடலோரக் காவல்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். கடலில் தத்தளித்த குஜராத்தைச் சேர்ந்த 17 கப்பல் ஊழியர்களையும் மீட்டு மனாமா நகருக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. இவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இந்திய தூதரகம் முயன்று வருகிறது.
இந்த 17 பேருக்கும் பஹ்ரைன் இந்திய சமுதாயத்தினரின் உதவியோடு இயங்கும் மீட்பு நிதி மூலம் உணவு மற்றும் உடைகள் தரப்பட்டுள்ளன.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications