கூடங்குளம் அருகே கடற்கரையில் வெடிகுண்டு குவியல்
கூடங்குளம்: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கூத்தங்குளி என்ற இடத்தில் கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குளியில் சமீபத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையை மோதல் ஏற்பட்டது. இதில் ரீகன் என்ற மீனவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக கணேசன், காந்தி, வினோ ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை கூடங்குளம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது அவர்கள், ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளை கடற்கரை மணலில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார்கள்.
உடனே போலீசார் விரைந்து சென்று அவர்கள் கூறிய இடத்தில் மணலை தோண்டி சோதனை நடத்தியபோது அங்கு பிளாஸ்டிக் பைககளில் 38 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.
நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக அவர்கள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தக் கிராமத்தில் வெடிகுண்டுகள் இவ்வளவு பெரிய அளவில் சிக்கியது இது முதல் முறையல்ல. கடந்த 1999ம் ஆண்டு நடந்த மீனவர்களுக்கிடையிலான மோதலைத் தொடர்ந்து அங்கு 2500 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications