நடத்தையில் சந்தேகம்: மகளை கொலை செய்த தந்தை
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் அருகே பெற்ற மகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தந்தை ஆத்திரத்தில் மகளை வெட்டிக் கொலை செய்து விட்டார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜகாங்கீர் மகன் ரீபாய். இவருக்கும் கல்லிடைகுறிச்சி மேல்முக நாடார் தெருவை சேர்ந்த திவான் முகமது மகன் செய்யது அலி பாத்திமாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 3 வயதில் மகன் உள்ளான்.
துபாயில் வேலை செய்து வந்த ரீபாய் கடந்த 15 நாட்களுக்கு முன் ஊர் திரும்பினார். அப்போது ரீபாய் - பாத்திமா தம்பதிகளுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், பாத்திமா அம்பாசமுத்திரத்தில் உள்ள ஜமாத்தில் புகார் செய்தார்.
ஜமாத்தார் தம்பதியினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பாத்திமா, கணவருடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை. நான் எனது தந்தையுடன் செல்கிறேன் எனக் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட ஜமாத்தார் பாத்திமாவை அவரது தந்தை தீவான் முகமதுவுடன் அனுப்பி வைத்தனர்.
கணவரை பிரிந்து மகனுடன் வந்த மகளை தீவான் முகம்மது, தான் குடியிருக்கும் பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி குடியிருக்க வைத்தார். இந்நிலையில் மகனுடன் வாழ்ந்து வந்த பாத்திமா கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் செய்யது அலி பாத்திமா நேற்றிரவு வீட்டிற்கு வந்துள்ளார். மகளிடம் தீவான் முகம்மது, எங்கு சென்று ஊர் சுற்றினாய் என்று கேட்டுள்ளார். இதனால் தந்தை-மகளுக்கிடையை கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்து சமாதானம் செய்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த அவர் இரவு முழுவதும் தூங்கமலேயே விழித்திருந்தார். அப்போது அவரிடம் மனைவி ஷர்பினிஷா பேகம் எதுவானாலும் காலையில் பார்த்து கொள்ளலாம், இப்போது போய் தூங்குங்கள் என்று கூறினார்.
மகளின் நடத்தை பிடிக்காத தீவான் முகம்மது ஆத்திரம் தாங்காமல், காலையில் மனைவியுடன் மகள் வீட்டுக்கு சென்றார். மீண்டும் வாக்குவாதம் தொடரவே ஆத்திரத்தில் தீவான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெற்ற மகளை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பெற்ற மகளையே வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications