இலங்கை சிறையில் நல்ல கவனிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேஸ்வரம்: இலங்கை அரசின் பிடியிலிருந்து மீண்டு ராமேஸ்வரம் திரும்பியுள்ள 12 மீனவர்களும், தங்களை, இலங்கை போலீஸார் சித்திரவதையோ, கொடுமையோ செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலு, அந்தோணி, சேவியர் உள்ளிட்ட 12 மீனவர்கள், ஜனவரி 29ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 பேரும், தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக 31ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை சிறையிலிருந்து மீண்டு சொந்த ஊர் திரும்பியுள்ள 12 பேரும் தாங்கள் இலங்கையில் நன்றாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தங்களது இலங்கை அனுபவத்தை மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். அவர்கள் கூறுகையில், எங்களை போலீஸார் எந்தவித சித்திரவதையும் செய்யவில்லை. சிறையில் எங்களுக்கு சரியான முறையில் சாப்பாடு போடப்பட்டது. 3 வேளை சாப்பாடு போட்டனர்.
யாழ்ப்பாணம் சிறையில் எங்களை அடைத்தனர். அங்கு எங்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டனர்.
நாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர். அதற்குப் பதில் ரூ. 4500 பணம் கொடுத்தனர். அதில் 500 ரூபாயை நாங்கள் செலவழித்து விட்டோம். மீதப் பணத்தை இந்திய நாணயமாக மாற்றக் கொடுத்தோம் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications