போனில் பேசியதால் ஆத்திரம் - மாணவன் கையைக் கடித்த ஆசிரியர்
கோவை: பள்ளி விடுதியில் மாணவன் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அந்த மாணவனின் கையைக் கடித்து விட்டார். கடிபட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியின் விடுதியில்தான் இந்த அலங்கோலம் நடந்துள்ளது.
இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வசதிக்காக தொலைபேசி வசதி உள்ளது. ஆனால் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொலைபேசியை பயன்படுத்த அனுமதி இல்லை. அப்போது படிப்பு நேரம் என்பதால் தொலைபேசியை உபயோகிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், நேற்று படிப்பு நேரத்தின்போது தொலைபேசி மணி ஒலித்தது. இதைப் பார்த்த ஒரு ஆசிரியர், 12வது வகுப்பு படிக்கும் பழனிச்சாமி என்பவரின் மகன் சதீஷை அழைத்து போனை எடுக்குமாறு கூறினார்.
சதீஷும் போனை எடுத்துள்ளார். அந்த நேரம் பார்த்து விடுதி வார்டன் அங்கு வந்துள்ளார். சதீஷ் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து கோபமடைந்த அவர் மாணவனின் கையைப் பிடித்து ஓங்கிக் கடித்துள்ளார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் வேறு மாதிரியாக இதை கூறுகிறது. ஆசிரியரிடம் மாணவன் சதீஷ் தவறுதலாக நடந்து கொண்டதாகவும், அதனால் அவனை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளதாகவும், அவனது டிசியை வாங்கிச் செல்லுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் இந்தப் புகாரை மறுத்துள்ள பழனிச்சாமி, இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகனை விடுதி வார்டன் கடித்துள்ளார் என்றும், கைக் காயத்தையும், அதற்கு எடுத்துக் கொண்ட சிகிச்சையையும் அவர் புகாரில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்மேகம் கூறுகையில், இது உண்மையில் நடந்திருந்தால் அது தவறானது, கடும் கண்டனத்துக்குரியது. இந்த தண்டனை மிகக் கொடூரமானது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர், தான் மாணவனைக் கடித்ததாக விசாரணையின்போது ஒப்புக் கொண்டுள்ளாராம். ஆனால் பள்ளி நிர்வாகம்தான் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்பதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று வருகிறதாம்.
இருப்பினும் விவாகரம் சூடு பிடித்திருப்பதால் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications