கழிவு நீர் சுத்திகரிப்பு: சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதியை இதுவரை ஏற்படுத்தாத 70 சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சாய பட்டறைகளும், 100க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
சாயப் பட்டறைகளுடன் தொடர்புடைய பிளீச்சிங் பட்டறைகள் 100க்கும் மேல் உள்ளது. இந்த சாயப்பட்டைறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால் ஆகியவை மாசுபட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதால் அந்த நீரை உபயோகிக்கும் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளும் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட விவசாயிகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன் பின்னர் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் ஆலைகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் ஆய்வில், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பிளீச்சிங் மற்றும் சாயப் பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ.பிளாண்ட் அமைக்காமல் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த குழுவினர் கொடுத்த அறிக்கையை வைத்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைப்பதுடன், மின் இணைப்பை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரோடு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றிய 70 பிளீச்சிங் பட்டறைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்க உள்ளோம்.
சாயப்பட்டறைகளில் ஆர்.ஓ.பிளாண்ட் அமைக்க கோரியும், கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் கண்டுகொள்வதே கிடையாது என்றார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications