உத்தரப் பிரதேசம்- சரயு நதியில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹோன்டா: உத்தரப்பிரேத மாநிலத்தில் இரு இடங்களில் நடந்த கோர விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரேதம், ஹோன்டா மாவட்டத்தில் உள்ள சரயூ ஆற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் படகில் சென்றனர்.

அப்போது படகு திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்ததில் படகில் இருந்த அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். இதில் 5 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். எஞ்சிய 10 பேரும் நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டனர். இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

சாலை விபத்தில் 8 பேர் பலி:

உ.பி.யில் ஆக்ரா அருகே சையன் என்ற இடத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்து கொண்டிருந்த டிரக் மீது இன்று அதிகாலை நேருக்கு நேராக மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் 1 குழந்தை உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+