பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை இன்று முடிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருந்ததால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது.
இந்த இரு மாநில தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் அந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழுவில் உள்ள 7 அமைச்சர்களில் 4 அமைச்சர்கள் மட்டுமே இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த இக்குழு, இது குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
இக்குழுவின் பரிந்துரையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2ம், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று கூட்டம் நடைபெறவில்லை. இந்த வார இறுதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பெட்ரோல், டீசல், எல்பிஜி, மண்ணெண்ணை ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ. 71 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 10.57ம், டீசலுக்கு 11.56 ரூபாயும், மண்ணெண்ணைக்கு ரூ. 19.89 ரூபாயும், காஸ் சிலிண்டருக்கு ரூ. 331ம் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
்கு ரூ. 2ம், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று கூட்டம் நடைபெறவில்லை. இந்த வார இறுதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பெட்ரோல், டீசல், எல்பிஜி, மண்ணெண்ணை ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ. 71 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 10.57ம், டீசலுக்கு 11.56 ரூபாயும், மண்ணெண்ணைக்கு ரூ. 19.89 ரூபாயும், காஸ் சிலிண்டருக்கு ரூ. 331ம் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்

Click it and Unblock the Notifications