ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு

வட இந்தியர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜ் தாக்கரே பேசியதால் அங்கு பெரும் பரபரப்பும், சர்ச்சையும், வன்முறையும் வெடித்துள்ளன.
நேற்று ராஜ் தாக்கரேவின் கட்சியைச் ேசர்ந்தவர்கள் வட மாநிலத்தவரை குறி வைத்து தாக்கினர். சமாஜ்வாடிக் கட்சியினருக்கும் தாக்குதல் நடந்தது. மேலும், சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ராஜ் தாக்கரே கட்சியினர் புகுந்து ரகளை செய்தனர்.
இதுதொடர்பாக ராஜ் தாக்கரே மீது ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் அமர்சிங் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குர் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அமர்சிங் கூறுகையில், வட மாநிலத்தவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், என்னைக் கொன்று விடுவதாகவும் ராஜ் தாக்கரே மிரட்டியுள்ளார். உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும் என்றார்.
இதற்கிடையே, வன்முறை தொடர்பாக ராஜ் தாக்கரே கட்சியினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications