புலிகளை விரட்டியடிப்போம்: ராஜபக்சே

இலங்கையில் இன்று 60வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொழும்பு காலே மைதானத்தில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ராஜபக்சே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இலங்கையின் வட பகுதியை தீவிரவாதத்தின் பிடியிலிருந்து மீட்போம். மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு அரசியல் தீர்வும், அரசியல் சுதந்திரமும் கிடைக்க வழி செய்வோம்.
இலங்கையை இன்று இரண்டு சவால்கள் எதிர்கொண்டுள்ளன. நாட்டின் வளர்ச்சி மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்குவது ஆகிய அந்த இரு சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக சந்தித்து சமாளித்து வெற்றி பெறுவோம்.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியின் பல பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. வடக்கில் உள்ள இரு மாவட்டங்களில் மட்டும்தான் தற்போது விடுதலைப் புலிகள் உள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளில் புலிகளை வெகுவாக ஒடுக்கியுள்ளோம். நமது படைகள், பல வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வெற்றிகளை நமது படைகள் கண்டு வருகின்றன.
இனப் பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு நடைமுறைக்கு சாத்தியமானாக இருக்க வேண்டும். சோதனை முறையிலான தீர்வினால் எந்தப் பலனும் இல்லை. அதை ஏற்கவும் முடியாது.
இதுவரை ஆயிரக்கணக்கோரின் ரத்தங்கள் சிந்தி விட்டது.இனிமேலும், பரீட்சார்த்த முயற்சிகள் பலன் அளிக்காது. எனவேதான் இதுவரை சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் அமைதித் தீர்வுக்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைதித் தீர்வு தொடர்பாக அரபு நாடுகள், புத்த மத நாடுகளுடன் இலங்கை நல்லுறவை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். மேற்கத்திய நாடுகளுடனும் உண்மையான உறவு இலங்கைக்கு உள்ளது என்றார் அவர்.
முன்னதாக ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதை ராஜபக்சே பார்வையிட்டார்.
கொழும்பிலும், தென் பகுதியிலும் அடுத்தடுத்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் கொழும்பில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications