தா.கிருட்டிணன் கொலை வழக்கு-சித்தூர் நீதிமன்றத்தில் அழகிரி ஆஜர்

Subscribe to Oneindia Tamil

சித்தூர்: முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இன்று சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி தா.கிருட்டிணன் மதுரையில் அவரது வீட்டிற்கு அருகில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மு.க.அழகிரி உட்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இந்த வழக்கு சித்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரி உட்பட 12 குற்றவாளிகளும் இன்று நீதிபதி துர்காபிரசாத் முன்னிலையில் ஆஜரானார்கள்.

நீதிபதி வரும் பிப்ரவரி 11ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு சித்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு அழகிரி 3 முறை ஆஜராகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+