• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைதிக்கு ஓரினச் சேர்க்கை கொடுமை-சர்ச்சையில் இன்ஸ்பெக்டர்

By Staff
|

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட கைதியை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி சித்திரவதை செய்ததாக இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் சிரில் ஜோசப். இவரது மகன் பிரவீன்குமார் (28). வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவரது பெற்றோர் விருப்பப்பட்டதால் பாதிரியாருக்கான படிப்பையும் படித்தார்.

இந்த நிலையில் ஆவடியைச் ேசர்ந்த காயத்ரி (18) என்ற பெண்ணுக்கும், பிரவீன் குமாருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இரு வீட்டாருக்கும் இது தெரிய வந்தது. ஜாதியைக் காரணம் காட்டி காதலுக்கு தடை போட்டனர். காயத்திரியை வேறு இடத்தில் கட்டி வைக்கவும் ஏற்பாடுகள் நடந்தன.

இதையடுத்து காதலியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் பிரவீன் குமார். இதையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் காயத்திரியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.

விசாரணையில் பிரவீன் குமாரும், காயத்திரியும் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் பிடித்தனர். பிரவீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பிரவீன் ஒரு புகார் அனுப்பியுள்ளார். அதில், நானும் காயத்ரியும் 6 மாதங்களாக காதலித்து வந்தோம். இருவரும் வேறு ஜாதி என்பதால் அவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு ஓடி விழுப்புரம் சென்றோம் அங்குள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.

பின்னர் எனது சொந்த ஊரான சிவகாசியை அடுத்த தாயில்பட்டிக்கு சென்றோம். அங்கு 15 கணவன்-மனைவியாக குடித்தனம் நடத்தினோம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி அன்று அதிகாலை அந்த பகுதி போலீஸ்காரர் ஜெயராமன் என்பவர் எங்கள் வீட்டு கதவை தட்டி எழுப்பினார். வெளியே வந்து பார்த்த போது அவருடன் ஆவடி சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி விநாயகம், ஒரு பெண் போலீஸ், ஒரு போலீஸ்காரர் காயத்ரியின் உறவினர்கள் கும்பலாக நின்றிருந்தனர்.

எங்களிடம் அன்பாக பேசினர். ஊருக்கு வாங்க முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என கூறி அவர்கள் வந்த குவாலிஸ் காரில் ஏற்றி அழைத்து வந்தனர். கார் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் காயத்ரியின் உறவினர்கள் என்னை அடிக்க ஆரம்பித்தனர் (காதல் படத்தில் வருவது போல).

காயத்ரி தடுத்தும் கேட்கவில்லை. இதை உடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் கண்டு கொள்ளவே இல்லை.

மறுநாள் 15-ந்தேதி ஆவடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து என்னை சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தினர். என்னையும் எனது மனைவி காயத்ரியையும் போலீஸ் நிலைய சிறைக்குள் அமர வைத்து, தாம்பத்ய உறவு சம்பந்தமாக மிக கேவலமான கேள்விகளை எல்லாம் இன்ஸ்பெக்டர் மனோகரன் கேட்டார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த, அறைக்குள் குடி போதையில் இன்ஸ்பெக்டர் மனோகரன் வந்தார். என்னிடம் ஆடைகளை களைய சொன்னார். என்னை சரமாரியாக அடித்து உதைத்து, ஓரினச் சேரக்கையில் ஈடுபட்டார். பின்னர் அவரது சிறுநீரை குடிக்க வைத்தார்.

இந்தக் கொடுமைகளால் அதிர்ச்சி அடைந்த நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் இவற்றையெல்லாம் உலகுக்கு தெரிவிக்க வேண்டும் இது போல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்பதால் மனதை கல்லாக்கி நடை பிணமானேன்.

காயத்ரியை அவளது பெற்றோருடன் அனுப்பி வை இல்லை என்றால் உனக்கு நேர்ந்த கொடுமையெல்லாம் உன்னுடைய இளம் மனைவிக்கும் நடக்கும் என மனோகரன் மிரட்டினார். காயத்ரியாவது நன்றாக இருக்கட்டும் என நினைத்து அவரது பெற்றோருடன் செல்ல சம்மதித்தேன்.

காயத்ரிக்கு 18 வயது ஆகிறது அதற்கு உரிய சான்று உள்ளது. காயத்ரி குடும்பத்தாரிடம் ரூ.30,000 வாங்கிக் கொண்டு அவளுக்கு 16 வயதுதான் ஆகிறது என போலலியான வழக்கு பதிவு செய்து என்னை சிறையில் அடைத்தனர்.

நான் பூந்தமல்லி ஜெயிலில் 20 நாட்களும் புழல் ஜெயிலில் 25 நாட்களும் அடைக்கப்பட்டேன்.

என்னைப் போல் நிறைய பேர் இன்ஸ்பெக்டர் மனோகரனின் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளேன்.

எனவே மனோகரனிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

புகாரின் நகலை முதல்வர் கருணாநிதியின் புகார் பிரிவுக்கும், மாநில மனித உரிமை ஆணையம், டிஜிபி, சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் பிரவீன்குமார் அனுப்பியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் மீதான இந்த பயங்கர குற்றச்சாட்டு சென்னை காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

தென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
Po.no Candidate's Name Votes Party
1 Sumathy (alias) Thamizhachi Thangapandian 524316 DMK
2 J.jayavardhan 284067 AIADMK

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

Loksabha Results

PartyLWT
BJP+43312355
CONG+117788
OTH554499

Arunachal Pradesh

PartyLWT
BJP111930
JDU257
OTH178

Sikkim

PartyLWT
SKM31316
SDF5813
OTH000

Odisha

PartyLWT
BJD1132115
BJP21021
OTH10010

Andhra Pradesh

PartyLWT
YSRCP11139150
TDP61824
OTH011

-

Loksabha Results

PartyLWT
BJP+43312355
CONG+117788
OTH554499

Arunachal Pradesh

PartyLWT
BJP111930
JDU257
OTH178

Sikkim

PartyLWT
SKM31316
SDF5813
OTH000

Odisha

PartyLWT
BJD1132115
BJP21021
OTH10010

Andhra Pradesh

PartyLWT
YSRCP11139150
TDP61824
OTH011

-
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more