ஜெய்ப்பூரில் அமிதாப் பச்சன் குடும்பம் முகாம்
ஜெய்ப்பூர்: மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் நடந்து வருவதன் பின்னணியில், நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தோடு ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார்.
அமிதாப் பச்சன் குறித்து ராஜ் தாக்கரே சரமாரியாக புகார் கூறப் போக தற்போது மும்பையில் வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதல் நடந்து வருகிறது. மும்பை தவிர தானே, நாசிக் ஆகிய நகரங்களிலும் வட இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
மும்பை ஜூஹுவில் உள்ள அமிதாப் பச்சன் வீடு மீது சோடா பாட்டில் வீசித் தாக்கப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப் குடும்பத்தினர் யாரும் நேற்று மும்பையில் இல்லை. அனைவரும் ஜெய்ப்பூருக்கு வந்துள்ளனர். முதலில் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் ஜெய்ப்பூர் வந்தனர். படப்பிடிப்புக்காக அவர்கள் வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப் பச்சனும், மனைவி ஜெயாவுடன் நேற்று ஜெய்ப்பூர் வந்தார். கூடவே சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங்கும் வந்தார்.
சிம்லாவில் படப்பிடிப்பில் இருந்த அமிதாப், படப்பிடிப்பை விட்டு விட்டு ஜெய்ப்பூர் வந்துள்ளார்.
மொத்தக் குடும்பமும் ஜெய்ப்பூரில் திரண்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த சந்திப்பில் எந்த விசேஷமும் இல்லை, அபிஷேக் பச்சனின் பிறந்த நாளைக் கொண்டாடவே அமிதாப் குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் குழுமியுள்ளனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications