காதலர் தினம் - ராம.கோபாலன் எதிர்ப்பு
சென்னை: காதலர் தினம் லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு வியாபாரிகளால் நடத்தப்படும் கலாச்சார சீரழிவு. எனவே காதலர் தின கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு நாடு முழுவதும் மிருகங்களும் கண்டு வெட்கப்படக் கூடிய செக்ஸ் வக்கிரங்கள் நடந்தன. இது ஒரே நாளில் நடந்துவிட்ட நிகழ்ச்சி கிடையாது. டிவி, சினிமா மற்றும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கலாச்சார அழிப்பு வியாபாரிகளின் கூட்டு முயற்சியாகும்.
திட்டமிட்ட ரீதியில் இவர்கள் போட்ட விதை குடி, கும்மாளம், குத்தாட்டம் போன்ற ஒழுக்க சிதைவு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.
சென்னையில் பிரபல ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து ஆடுவதற்கு அழைப்பு விடுத்ததை போல மது, மங்கை, கூத்தடித்தல் போன்ற நிகழ்ச்சிகளை இந்த காதலர் தினத்தன்று நடத்தாமல் இருக்க அரசு தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படித்த இளைஞர்கள் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதால் மேடை சரிந்து உயிர்ச்சேதம், காயமடைந்தது அனைவரும் நாம் அறிந்ததே. இந்த கலாச்சார சீரழிவை, காட்டுமிராண்டித்தனத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தவிர எவரும் கண்டிக்கவில்லை.
தொழில் வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி போன்ற எத்தனையோ துறைகளில் ஒரு நாடு முன்னணி வகித்தாலும் அந்த நாட்டில் ஒழுக்கம் இல்லை என்றால் அந்நாடு வீழ்ச்சியுறும் என்பதற்கு பல நாடுகள் எடுத்துக்காட்டு.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுதந்திரம் கொடுப்பதாக கூறி கொண்டு அவர்கள் வரம்பு மீறுவதை அனுமதிக்கக் கூடாது. காதலர் தினத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். புத்தாண்டை போல் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications