செங்கோட்டை-சென்னை ரயில் நாளை முதல் தொடக்கம்

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லை பகுதியான செங்கோட்டையில் 1901ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேற்கு தொடர்ச்சி மலையை குடைத்து ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இப்பாதையில் கடந்த 1996ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் கொல்லம், சென்னை, செங்கோட்டை ரயில்களும் அடங்கும்.
அதன்பின் செங்கோட்டை-விருதுநகர் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த வழியில் விருதுநகர் முதல் தென்காசி வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு இப்பாதையில் வாரத்தில் 7 நாட்களும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
தென்காசி-செங்கோட்டை இடையே 7 கிமீ அகல ரயில் பாதை அமைக்கும் பணி 4 ஆண்டு காலமாக நடந்து முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த தடத்தில் ரயில் இயக்கப்படவில்லை.
இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி ஏராளமான கோரிக்கை மனுக்களும் அனுப்பப்பட்டன.
இதன் பின்னர் தென்காசி-செங்கோட்டை பாதையில் பல்வேறு கட்ட சோதனை நடத்தப்பட்டு ரயில்கள் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே நாளை முதல் செங்கோட்டையிலிருந்து, சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்கத்தினை காலை 11 மணிக்கு மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஆர்.வேலு தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை, சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா, கோட்ட மேலாளர் ஹேமந்த் குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு











Click it and Unblock the Notifications