தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்?
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மாற்றப்படலாம் என்று தெரிகிறது. மீண்டும் மத்திய அமைச்சர் வாசனே மாநில காங்கிரஸ் தலைவராகலாம் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப், குஜராத், இமாச்சல பிரதேசம் என அடுத்தடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இந் நிலையில் இந்த ஆண்டு மேலும் 10 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.
கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல் கட்டமாக மாநில கமிட்டிகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழுக்களை முழுமையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோஷ்டி அரசியல் நடத்தி வரும் முக்கிய தலைவர்களான மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.வி.தங்கபாலு, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
எந்த செல்வாக்கும் இல்லாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமியால் கட்சியை சரிவர நடத்த முடியவில்லை. அவருக்கு முக்கிய தலைவர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரை தூக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவுடன் ஒத்துப் போகும் வாசனையே தலைவராக்க மத்திய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதே நேரத்தில் விஜய்காந்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி வரும் இளங்கோவனை தலைவராக்கலாமா என்ற சிந்தனையும் காங்கிரசிடம் உள்ளது.
இதன்மூலம் திமுகவை அடக்கி வைப்பதோடு, தேவைப்பட்டால் கேப்டனுடன் கூட்டணி போடவும் ஈசியாக இருக்கும் என காங்கிரஸ் கருதுகிறது.
அதே நேரத்தில் இந்தப் பதவியைப் பிடிக்க கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட சிலரும் போட்டிபோட்டு வருகின்றனர். இந் நிலையில் இன்று தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அருண்குமாருடன் சோனியா காந்தி இன்று
(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
அதேபோல புதுச்சேரி மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக உள்ள சண்முகத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் காந்திராஜ், முன்னாள் சபாநாயகர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோரில் ஒருவரை தலைவராக்கவும் மத்திய தலைமை திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி டெல்லி விரைந்துள்ளார். அதேபோல புதுச்சேரி மாநில தலைவர் சண்முகமும் டெல்லி சென்றுள்ளார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications