அரசு பேருந்து ஜப்தி - பயணிகள் ஓட்டம்
மதுரை: மதுரையில் பயணிகளோடு நின்ற அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
மதுரை கொடிக்குளம் புதூரைச் சேர்ந்த முத்துக்கனி என்பவரது மகன் சங்கரபாண்டியன். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2000 - ம் ஆண்டு பள்ளி முடிந்து சர்வேயர் காலனி பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மாணவண் மீது வேகமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து இறந்து போனார்.
இதற்கு நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை முத்துக்கனி, தாய் பேச்சி ஆகியோர் மதுரை தலைமை மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட மாணவண் குடும்பத்திற்கு போக்குவரத்து கழகம் ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொடுக்க 2005 ம் ஆண்டு நீதி மன்றம் உத்திரவிட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தியது. இதனால் முத்துக்கனி மீண்டும் நீதி மன்றத்திற்கு சென்றார்.
முத்துக்கணிக்கு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ 2 லட்சத்து 70 ஆயிரம் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் போக்குவரத்து கழகம் செயல்படுத்தவில்லை.
இதனால் அதே நீதி மன்றத்தில் முத்துக்கனி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் மனுதாரர்கள், நீதி மன்ற ஊழியர்கள் ஆகியோர் நேற்று மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு சென்றனர். ஆங்கு ஆரப்பாளையம் செல்ல பயணிகளுடன் இருந்த அந்த டவுன் பஸ்சை ஜப்தி செய்ய வந்துள்ளதாக நீதிமன்ற ஊழியர்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கூறினர். இதை கேட்டு அலறி அடித்து பஸ்ஸில் இருந்த பயணிகள் இறங்கினர்.
பின்பு உயர் அதிகாரிகள் வந்து நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சு வார்தை நடத்தினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications