சிவகாசி பட்டாசு ஆலையில் தீ-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை குடவுனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
சிவகாசி அனுப்பன்குளம் அருகே தனியார் பட்டாசு தொழிற்சாலையின் குடவுனில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மாடசாமி (வயது 40) என்ற தொழிலாளி பலியானார்.
தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரவு நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்தப் பகுதியே பகல் போல காட்சியளித்தது.
மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் சாம்பலாகிவிட்டன.
பலியான மாடசாமிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications