பறந்து கொண்டிருந்த கோவை-சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி ஹெராயின் பறிமுதல்

கோவையில் இருந்து நேற்று நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவையில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விமானம் கோவையில் மீண்டும் தரையிறங்கியது.
இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு அவர்களது உடமைகள் மீண்டும் சோதனையிடப்பட்டன.
இதில் கோவை வெரைட்டிஹால் மானிய தோட்டம் பகுதியை சேர்ந்த அகமது என்பவரின் மகன் இப்ராகிம் (24) என்பவரின் பேகேஜில் இருந்து 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 27 கோடி.
இப்ராகிமை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றதையடுத்து விமானம் மீண்டும் சிங்கப்பூர் கிளம்ப அனுமதிக்கப்பட்டது.
இப்ராகிம் மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறந்து கொண்டிருந்த விமானத்தை தரையிறக்கி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications