பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து 8 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 3 ராணுவ ஜெனரல்களும் 5 வீரர்களும் பலியாயினர்.
தீவிரவாதத்துக்கு பேர் போன வசீர்ஸ்தான் பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இப் பகுதி பழங்குடியினர் வசிக்கும் சுயாட்சி கொண்ட மாகாணமாகும்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பின்லேடனின் ஆதரவாளர்களான பழங்குடியின படைகளுக்கும் இடையே இங்கு அவ்வப்போது இங்கு மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள பைலட் தெரிவித்ததாக ராணுவம் கூறியுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களில் தெற்கு வசீர்ஸ்தான் மாகாணத்தின் ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜாவெத் சுல்தானும் அடக்கம். மேலும் 2 பிரிகேடியர் ஜெனரல்களும் பலியாகியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications