'டிரவுசருக்கு' மாறிய டாக்டர் பிரகாஷ்!

பெண்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் உலவ விட்ட சர்ச்சையில் சிக்கி கைதானவர் டாக்டர் பிரகாஷ். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று பிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுதவிர கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப குற்றத் தடுப்புச் சட்டம், பெண்களை தவறாக சித்தரித்தது, விபச்சாரத் தடுப்புச் சட்டம், இன்டர்நெட்டில் பெண்களின் படங்களை ஆபாசமான முறையில் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தனியாக 38 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அனைத்து தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே அவர் அதிகபட்சம் ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவிக்க வேண்டி வரும்.
தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் புழல் மத்திய சிறையில், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான அறைக்கு பிரகாஷ் மாற்றப்பட்டார்.
அவர் வருமான வரி கட்டுபவர் என்பதால் ஏ 1 பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் 20 கைதிகள் இருக்கிறார்கள்.
தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கான வெள்ளை நிற தொப்பி, அரை டிராயர், சட்டை பிரகாஷுக்கு தரப்பட்டுள்ளது. அவரது அறையில் டிவி இருக்கும். தனியாக மேசை, சேர் தரப்படும்.
வாரத்திற்கு அவருக்கு நான்கு வேளை கோழிக் கறி சாப்பாடு தரப்படும். மற்ற நாட்களில் சாம்பார் சாதம், ரச சாதம் உள்ளிட்டவை தரப்படும்.
வாரத்தில் 2 நாட்கள் உறவினர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். 2 போர்வை, தலையணை, ஒரு ஜமுக்காளம் ஆகியவை தரப்படும். இதுதவிர சாப்பாட்டு தட்டு, மக் ஆகியவையும் தரப்டும். படுக்க கட்டிலும் கொடுக்கப்படும்.
தோட்டவேலை, தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து டாக்டர் பிரகாஷ் இனி சிறையில் வேலை பார்க்க வேண்டும்.
பிரகாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்ட உடனேயே அவரது மனைவி லதா என்கிற ஸ்ரீலட்சுமி விவாகரத்து செய்து விட்டார். தனது வளர்ப்பு மகளுடன் பாலக்காட்டுக்கே திரும்பிப் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications