பாதயாத்திரையில் குமரி அனந்தனுக்கு உடல்நலக் குறைவு-மருத்துவமனையில் அனுமதி!
கரூர்: இந்திய நதிகளை இணைக்கவும், மத நல்லிணக்கத்துக்காக பாரத மாதா கோவில் எழுப்பவும் வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தனுக்கு இன்று (பிப்ரவரி 8) மதியம் திடீர் உடல் நலக் குறைவு ஏறப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டர்களுடன் மதுரையில் இருந்து சில தினங்களுக்கு முன் கிளம்பிய இந்த பாதயாத்திரை திண்டுக்கல், எரியோடு, கரூர் உள்பட பல பகுதிகள் வழியாக தர்மபுரி மாவட்டம் பாப்பாரபட்டி வரை செல்ல இருந்தது.
நேற்று இந்த யாத்திரைக் குழு கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இன்று காலை மீண்டும் கிளம்பிய யாத்திரை கரூர் நகரம், மண்மங்கலம், வேலாயுதம்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந் நிலையில் குமரி அனந்தனுக்கு காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. வலியைப் பொறுத்துக் கொண்டு நடந்த அவர் இன்று பகலில் நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.
தொடர்ந்து நடக்க முடியாமல் கடும் வலியால் அவதிப்பட்ட அவரை கரூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரி அனத்தை அழைத்துச் சென்றார்.
அங்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் ஓய்வெடுத்து வருகிறார். தொடர்ந்து பாதயாத்திரை சென்றால் குமரி அனந்தன் உடல் பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரது பாதயாத்திரை தற்காலிமாக ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications