அமெரிக்காவில் இன்னொரு இந்திய மாணவர் மர்மச் சாவு

பெங்களூரைச் சேர்ந்த சுப்பிரமணியம், சாராவதி தம்பதியின் மகன் மகேஷ் (20) அமெரிக்காவின் வடக்கு கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்து வந்தார். இறுதி செமஸ்டரில் இருந்த அவர் கேம்ப்பெல் கவுண்டியில் உள்ள ஹிட்டன்வேலி அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருடன் அதே பல்கலைக்கழகத்தில் எம்.இ. பயிலும் சன்னி என்ற அமெரிக்க மாணவரும் தங்கியிருந்தார்.
இந் நிலையில் 3 வாரங்களுக்கு முன் இவர் தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால், அதை சில நாட்கள் கழித்தே அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகேஷ் உடலை பிரதேசப் பரிசோதனை நடத்திய டாக்டர்கள், மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என ரிப்போர்ட் தந்துள்ளனர்.
இந் நிலையில் இறந்து 18 நாட்களாக நிலையில் நேற்று மகேஷின் உடல் பெங்களூர் வந்து சேர்ந்தது. நேற்றே இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டுவிட்டன.
முதலில் மகேஷ் பல்கலைக்கழகத்தில் இறந்ததாக பெற்றோருக்கு தகவல் தரப்பட்டது. பின்னர் குடியிருப்பில் இறந்ததாக பெற்றோருக்கு தகவல் வந்தது. மேலும் பெற்றோரின் பல கேள்விகளுக்கும் பல்கலைக்கழகத்திடம் இருந்து மிகவும் குழப்படியான பதில்கள் தரப்பட்டுள்ளன.
இதனால் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மகேஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தாயார் சாராவதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications