முஸ்லீம்கள் ஆதரவை இழக்கிறது அல்-கொய்தா: அமெரிக்கா
வாஷிங்டன்:முஸ்லீம்களுக்கு எதிராகவே அல் கொய்தா வன்முறையில் ஈடுபட்டு வருவதால், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவையும், அனுதாபத்தையும் வேகமாக இழந்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குநர் மைக் மெக்கன்னல், உளவுப் பிரிவுக்கான நாடாளுமன்றக் கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இஸ்லாமிய உலகினர் மத்தியில் அல் கொய்தா ஆதரவை இழந்து வருகிறது. இது எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. ஆனால் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
முஸ்லீம் மக்கள் மீது அல் கொய்தாவினர் மேற்கொள்றும் கொலை வெறித் தாக்குதல்கள், வன்முறைகள், இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அல் கொய்தா மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகள் மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
முஸ்லீம்களின் காப்பாளர் என நினைத்து வந்த சில முஸ்லீம்கள் கூட இப்போது அல் கொய்தாவினை தீவிரவாத இயக்கமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 18 மாதங்களில் அல் கொய்தா அமைப்புக்கு பெரும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. முன்பு போல அவர்களுக்கு தாராளமாக நிதியுதவி கிடைப்பதில்லை.
அல் கொய்தாவின் நோக்கம்தான் என்ன என்று பல முஸ்லீம் நாடுகள் கேட்க ஆரம்பித்துள்ளன.
அல் கொய்தா அமைப்புக்குள்ளும் கூட முன்பு போல தீவிரமான எண்ணம் கொண்டவர்கள் இப்போது இல்லை. பல தலைவர்கள் உள்பட பெருமளவிலா அல் கொய்தாவினர் தங்களது போர்க்குணத்திலிருந்து படிப்படியாக இறங்கி வந்து கொண்டுள்ளனர்.
அல் கொய்தா அமைப்பினர் சந்தித்து வரும் நெருக்கடிகள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்காவுக்கு இன்னும் அது மிரட்டலாகவே இருந்து வருகிறது.
பல்வேறு சரிவுகள், சோர்வுகள் ஏற்பட்டாலும் கூட அல் கொய்தா அமைப்பின் வீரியம் இன்னும் குறையவில்லை. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அல் கொய்தா இன்னும் தீவிரமாகவே உள்ளது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications