அமீத்குமாரை கொண்டு வர தாமதமாகும்!

டெல்லி அருகே குர்கானில் 500க்கும் மேற்பட்ட அப்பாவிகளிடம் அடி மாட்டு விலைக்கு சிறுநீரகங்களை எடுத்து ெவளிநாட்டினருக்கு பெரும் விலைக்கு விற்று மோசடி செய்த டாக்டர் அமீத் குமார் சில வார தலைமறைவுக்குப் பின்னர் நேற்று நேபாளத்தில் பிடிபட்டார்.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ இறங்கியுள்ளது. ஆனால் அவரைக் கொண்டு வருவது கால தாமதமாகும் எனத் தெரிகிறது.
அமீத்குமார் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து பல்வேறு நாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றுக்கு முறையான கணக்கு இல்லை. எனவே சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருந்ததாக அமீத்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, நேபாள நாட்டு சட்டத்திற்குப் புறம்பாக மனித உறுப்பு மாற்றம், இன்டர்போல் நோட்டீஸின் கீழ் என மேலும் இரு வழக்குகளையும் நேபாள போலீஸார் தொடரவுள்ளனர்.
நாளை அமீத்குமாரை காத்மாண்டு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர். அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுவார். இதன் பின்னர் நேபாள போலீஸார் தொடர்ந்துள்ள வழக்குகளில் அவர் விசாரிக்கப்படுவார். அதில் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டால், அந்த தண்டனை முடிந்த பிறகுதான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
மேற்கண்ட மூன்று வழக்குகளிலும் அமீத்குமாருக்கு மொத்தமாக 9 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
எனவே அமீத்குமாரை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தாமதமாகும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், பிற நாடுகளை விட நேபாளத்திலிருந்து நாடு கடத்துவது என்பது எளிதான விஷயம்தான். எனவே அமீத்குமாரை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும் என நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்றார் ஜெய்ஸ்வால்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications