அரசு மருத்துவமனைகளில் லஞ்சம்..அமைச்சர் எம்.ஆர்.கே எச்சரிக்கை
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உள்பட மாநிலத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு ஊழியர்கள் நச்சரித்து வருவது புதிய செய்தியல்ல.
இந் நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது,
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தண்டனைக்குரிய குற்றம். ஸ்டான்லி மருத்துவமனையில் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.
இனிமேல் அரசு மருத்துவமனைகளில் யாராவது லஞ்சம் கேட்டால் நோயாளிகள் தைரியமாக புகார் செய்யலாம். தவறு செய்யும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றார் அமைச்சர்.
இதுகுறித்து ஸ்டான்லி மருத்துக் கல்லூரி முதல்வர் டாக்டர் மைதிலி பாஸ்கரன் கூறியதாவது,
நோயாளிகள் யாரும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக புகார் தரவில்லை. இருந்தாலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் ஊழியர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications