'தமிழ்குடிமகன்' ஆன ரஷ்ய பேராசிரியர்

மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருப்பவர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி. 1965ம் ஆண்டு திருக்குறளும், சிலப்பதிகாரமும் ரஷிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டபோது அவற்றைப் படித்து தமிழ் மீது தீராப் பற்று கொண்டார்.
இதையடுத்து உடனடியாக தமிழ் கற்றுக் கொண்டார். தமிழைக் கற்றுத் தேர்ந்த அவர், ஞானத்தின் மொழி தமிழ் என தமிழின் புகழ் பாடத் தொடங்கினார்.
மேலும் தமிழ் மொழி, இலக்கியம் குறித்த ஆய்விலும் ஈடுபட்டார். எந்தவித சிந்தனைகளையும், உணர்வுகளையும் மிகச் சரியாக வெளிப்படுத்தும் ஒரே மொழி தமிழ் என்பது அலெக்சாண்டரின் கூற்று.
1969ம் ஆண்டு சங்க இலக்கியத்தை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் அலெக்சாண்டர்.
கடந்த ஆண்டு தனது மாணவர்கள் ஐந்து பேரோடு தமிழகம் வந்த அஏவர் தமிழ் கலாச்சாரம் குறித்தும், அதன் நீண்ட நெடிய பாரம்பரியம் குறித்தும் நேரில் கண்டறிந்து மகிழ்ந்தார்.
தற்போது திருச்சி வந்துள்ள அலெக்சாண்டர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியம் குறித்தும், தமிழ் இலக்கியம் குறித்தும் அழகுத் தமிழில் உரையாற்றியைதக் கேட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் மெய் மறந்து போய் விட்டனர்.
துல்லிய உச்சரிப்புடன் அவர் பேசும் தமிழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications