சிபிஐ காவலில் அமீத் குமார் - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சிறுநீரக மோசடி மன்னன் டாக்டர் அமீத் குமார் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வருகிற 22ம் தேதி வரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
டெல்லி குர்கான் அருகே 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்களை குறைந்த விலைக்குப் பெற்று லட்சக்கணக்கில், வெளிநாட்டினருக்கு விற்று மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்த டாக்டர் அமீத்குமார் வியாழக்கிழமை நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் சிபிஐ இறங்கியது. இருப்பினும் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு அமீத் குமாரை கொண்டு வர கால தாமதமாகும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நேபாள அரசை சிபிஐ தொடர்பு கொண்டு அமீத்குமாரை இந்தியாவிடம் ஒப்படைக்க முறைப்படி கோரிக்கை விடுத்தது. மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகமும், நேபாள அரசைத் தொடர்பு கொண்டு விரைவில் அமீத்குமாரை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இந்த முயற்சிகளின் விளைவாக நேற்று மாலை சிபிஐ அதிகாரிகளிடம் அமீத்குமார் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து தனி விமானம் மூலம் உடனடியாக அவரை டெல்லிக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
இரவு 7 மணியளவில் அமீத் குமார் டெல்லி கொண்டு வரப்பட்டார். டெல்லி கொண்டு வரப்பட்டதும் உடனடியாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
சிபிஐ தலைமை அலுவலகத்தில் அமீத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சஞ்சீவ் ஜெயின் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதி ஜெயின், வருகிற 22ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து அமீத்குமாரை விசாரிக்க அனுமதி அளித்தார்.
அமீத் குமார் மீது பயங்கர ஆயுதங்களால் வேண்டும் என்றே காயம் ஏற்படுத்துவது (ஐபிசி 326), தவறான செயல் (ஐபிசி 342), மோசடி (ஐபிசி 420), கிரிமினல் சதி (ஐபிசி 120பி) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதவிர 1994ம் ஆண்டைய மனித உறுப்பு மாற்ற சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications