லிபியாவில் தவிக்கும் 26 தமிழர்களை மீட்க நடவடிக்கை: காங். எம்.பி
காரைக்குடி: லிபியாவில் தவிக்கும் 26 தமிழர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேலை பார்ப்பதற்காக லிபியா சென்ற மதுரை மற்றும் மேலூரைச் சேர்ந்த 26 பேர் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இவர்கள் அனைவரையும் கணேசன் என்ற ஏஜென்ட் மாதத்திற்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.
அவர் மீது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் புகார் கொடுத்துள்ளனர். கணேசன் இதே போல் மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.85 ஆயிரம் பணம் வாங்கி ஏமாற்றி அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர்களுக்கு லிபியாவில் தினமும் 20 மணிநேரம் வேலை பார்த்தால் மட்டுமே ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு செல்ல ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவர்கள் அங்கு கைது செய்யப்பட்டால் நெருக்கடியான நிலையை சந்திக்க நேரிடும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications