தெலுங்கர்கள் மீது சிவசேனா தாக்குதல்

மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. வட இந்தியர்களைக் குறி வைத்து தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் இப்போது மகாராஷ்டிரா அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
ஷிர்டி சாய்பாபா அவதரித்த ஷிர்டி நகரில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட சிவ சேனா தொண்டர்கள் வணிகப் பகுதியில் குழுமினர். மகாராஷ்டிரா, மராட்டியர்களுக்கே என்று கோஷமிட்டபடி அப்பகுதியில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் திடீரென தெலுங்கு பேசுவோர் வைத்துள்ள கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். தெலுங்கில் இருந்த கடை விளம்பரப் பலகைகளை அடித்து நொறுக்கினர். அதேபோல ஆங்கில பெயர்ப் பலகைகளையும் அடித்து நொறுக்கினர்.
பின்னர் ஆவேசக் கூச்சலோடு பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
பால் தாக்கரே குடும்பக் கட்சியினர், மகாராஷ்டிரா அல்லாத பிற மாநிலத்தவர்கள் மீது தொடர்ந்து வரும் தாக்குதல்களால் மகாராஷ்டிராவில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications