ஒகனேக்கலில் கன்னட அமைப்பினர் ரகளை

வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் ஒகனேக்கலையே தங்களது மாநிலத்திற்குச் சொந்தமானதாக உரிமை கொண்டாடி பல கன்னட அமைப்புகள் அவ்வப்போது போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக வனத்துறை அதிகாரிகள் அத்துமீறி தமிழகப் பகுதிக்குள் நுழைந்து சர்வே பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த 2005ம் ஆண்டு ஒகனேக்கல் உரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பும் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினர் ஒகனேக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம், அங்கு தமிழக அரசு எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று திமிராக கூறி வருகிறது.
இந் நிலையில் இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் மாடு கொட்டாய் என்ற இடத்தில் கூடினர். இது கர்நாடக எல்லைக்குள் உள்ளது. அங்கிருந்து வீரபத்ரன் என்பவர் தலைமையில் தமிழக எல்லைக்குள் நுழையும் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவர்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அங்கு கர்நாடக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல தமிழக எல்லைக்குள் நுழைந்தால் பிடிப்பதற்காக தமிழக எல்லையிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மஞ்சள், சிவப்பு நிறத்திலான கர்நாடக கொடியோடு (மாநிலத்திற்கு கொடி இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது) ஆவசேமாக அவர்கள் ஊர்வலம் கிளம்பினர். தண்ணீரில் இறங்கி தமிழக பகுதிக்குள் வர அவர்கள் முயன்றனர்.
இதையடுத்து கர்நாடக போலீஸார் அவர்களை கைது செய்தனர். சிலர் வலுக்கட்டாயமாக தண்ணீரில் நீச்சலடித்து போக முயன்றனர். அவர்களை அப்படியே குண்டுக் கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் பதட்டம் காரணமாக புகழ் பெற்ற தொங்கு பாலத்திற்கு தமிழக அதிகாரிகள் சீல் வைத்து மூடி விட்டனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.
கர்நாடகத்தினரின் இந்த ரகளை அடிக்கடி தொடருவதைக் கண்டித்து பரிசல்காரர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரிசல்களும் ஓடவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications