நர்சிடம் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
நெல்லை: நெல்லயில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற நர்சிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை ஜங்ஷன், மதுரை ரோட்டில் உள்ள பாலபாக்கிய நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி பார்வதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.
இவர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
கொள்ளை போன சங்கிலியின் மதிப்பு ரூ.50,000 ஆகும்.
எஸ்.ஐ. வீட்டில் கொள்ளையடித்தவர் கைது:
தூத்துக்குடியில் எஸ்.ஐ. வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சங்கப்பேரி வீ்ட்டு வசதி வாரிய குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வசித்து வருகிறார்.
கடந்த ஜனவரி 14ம் தேதியன்று இவரது வீட்டில் இருந்த ரூ 6 லட்சம் ரொக்கப் பணம், 70 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடன் கொள்ளையடித்து சென்று விட்டான்.
இது குறித்து மாரியப்பன் போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றாலத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் அவரிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications