அமீத் குமார் கிளினிக், வீட்டில் சிபிஐ ரெய்டு
டெல்லி: சிறுநீரக மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் அமீத்குமாரின் நர்சிங ஹோம், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதுதவிர மேலும் 6 இடங்களிலும் சோதனை நடந்தது.
டெல்லி அருகே குர்கானில் 500க்கம் மேற்பட்டோரிடம் அடி மாட்டு விலைக்கு சிறுநீரகங்களைப் பெற்று, வெளிநாட்டினரிடம் அவற்றை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த அமீத்குமார் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டு சிபிஐயின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
12 நாள் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், அமீத்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குர்கானில் உள்ள ஆறு இடங்கள், அமீத்குமாரின் நர்சிங் ஹோம், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் சில நர்சிங் ஹோம்கள், கெஸ்ட் ஹவுஸ்களிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது, தடயவியல் நிபுணர்களும் உடன் இருந்தனர்.
மேலும், அமீத்குமாரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக மொராதாபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்ட உபேந்திரா, ஜெகதீஷ் நை, கியாசுதீன் ஆகிய மூவரையும் சிபிஐ தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
குர்கான் நீதிமன்றத்தில் நேற்று 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை தங்களது காவலில் அனுமதிக்குமாறு சிபிஐ கோரியது. இதையடுத்து பிப்ரவரி 16ம் தேதி வரை அவர்களை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications