கம்பம்-அச்சக அதிபரை கத்தியால் குத்திய கும்பல்
கம்பம்: கம்பம் அருகே அச்சக அதிபரை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஒடக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(50). அச்சக தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள்.
முருகேசன் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மூன்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த முருகேசன் அலறிக் கொண்டு வெளியே ஒடி வந்தார். ஆனாலும் அவரை விடாது துரத்தி வந்த அக்கும்பல் மீண்டும் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதை கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த டி.எல்.பி. செல்வராஜ், மற்றும் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பின்பு முருகேசனை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
போலீஸ் விசாரனையில் முருகேசனை கத்தியால் குத்தியவர்கள் சொக்கலிங்கம், அருளானந்தம், தனசேகரன் என தெரிய வந்தது. அதன் பேரில் அவர்கள் மீது உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications