பிரதமருக்கு கெடு, ஸ்டாலினுக்கு மிரட்டல்-மர்ம கடிதத்தால் பரபரப்பு!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக்கு வந்த ஒரு மர்மக் கடிதத்தில் பிரதமருக்கு கெடுவும், அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை சத்தியமூர்த்தி பஜாரில் உள்ள கனரா வங்கி கிளை மேலாளருக்கு இந்தக் கடிதம் வந்துள்ளது.
அதில், கனரா வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கொலை பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவை பிரித்து முஸ்ஸீம் நாட்டை உருவாக்க வேண்டும், இல்லையெனில் லோக்சபா, தமிழக சட்டசபை ஆகியவை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும், இதற்கெல்லாம் பிரமருக்கு மூன்று மாதம் கெடு விதிப்பதாகவும் சம்பந்தா சம்பத்தமில்லாமல் மென்டல்தனமாக எழுதப்பட்டிருந்தது.
இப்படிக்கு பிரபு தாஸ், ராஜீவ் காந்தி நகர், விருதுநகர் என்று முடிந்தது அந்தக் கடிதம்.
இது குறித்து வங்கி மேலாளர் உடனே டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் கடித்ததை கைப்பற்றினர் வங்கியில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.
அந்த கடிதம் அனுப்பியவனைப் பிடிக்க தனிப்பபடை அமைக்ப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications