ரூ.2.5 கோடி போதை மாத்திரை கடத்த முயன்ற வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ரூ. 2.5 கோடி மதிப்புள்ள கேட்டமைன் மாத்திரைகள் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் செல்லவிருந்த விமானத்தில் ஏற இருந்த சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் (26) என்பவரின் பெட்டிகளை அதிகாரிகள் ஸ்கேன்' செய்தபோது ஏதும் தெரியவில்லை.
ஆனால் சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதை திறந்து பார்த்தபோது கார்பன் பேப்பர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்த 12.5 கிலோ கேட்டமைன் போதை மாத்திரைகள் சிக்கின.
இதையடுத்து அபுபக்கர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின மதிப்பு ரூ.2.5 கோடியாகும்.












Click it and Unblock the Notifications