வளைகுடா இந்தியர்கள்-சிங்கப்பூர் டிவியில் குறும்படம்
துபாய்: வளைகுடாவில் வாழ்ந்து வரும் இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்த குறும் படம் வசந்தம் சென்ட்ரல் என்ற சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.
இதை சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனமே தயாரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இத் தகவலை குறும்பட நிகழ்ச்சியை தயாரித்து வரும் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
பிப். 24 குவைத்தில் ஓய்வு தினம்:
குவைத்தில் வரும் 24ம் தேதி ஓய்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குவைத் துணைப் பிரதமரும், அமைச்சரவை விவகார துறை அமைச்சருமான பைசல் அல் ஹாஜ் கூறுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஓய்வு தினமாக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாளுக்கும், சுதந்திர தின விடுமுறை தினங்களான 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு இடையில் வருவதாலும் 24ம் தேதியை ஓய்வு தினமாக அறிவிக்க அரசு தீர்மானித்தது என்றார்.












Click it and Unblock the Notifications