நக்ஸல்கள் தாக்கிய அதியமான்கோட்டை காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்
தர்மபுரி: நக்ஸல்களிடம் துப்பாக்கிகள், வாக்கிடாக்கியை பறி கொடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் காவல் நிலையத்துக்குள் நள்ளிரவில் புகுந்த நகஸ்லகள் அங்கு பாதி தூக்கத்தில் இருந்த ஒரு ஒரு காவரை மிரட்டி துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த லாக் அப் அறையை உடைத்து 6 துப்பாக்கிகளையும் காவலர் வைத்திருந்த வாக்கி டாக்கியையும் பறித்துக் கொண்டு சென்றனர்.
அந்த நேரத்தில் பணியில் இருந்திருக்க வேண்டிய மற்ற 3 காவலர்களும் இரவு நேரக் கடைகளில் மாமூல் வாங்கச் சென்றுவிட்ட நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் ராஜமாணிக்கம், ராஜா, போலீஸ்காரர் சுப்பிரமணி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த காவல் நிலையத்தின் இன்னொரு சப்-இன்ஸ்பெக்டரான பிரபாவதி, துணை எஸ்பி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். புதிய சப்-இன்ஸ்பெக்டராக கலைவாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் எஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூண்டோடு 'டிரான்ஸ்பர்':
இந் நிலையில் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 18 போலீஸ்காரர்களும் ஒட்டுமொத்தமாக ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். (இங்கு மாமூல் வசூலுக்கு வழியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலை-மாலை எக்ஸர்ஸைஸ் செய்ய வேண்டும், எங்காவது கலவரம் நடந்தால் வேனில் கொண்டு போய் இறக்கிவிடுவார்கள்)
மற்ற காவல் நிலையங்களில் இருந்து 18 போலீசார் அதியமான்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வாக்கிடாக்கியை பறிகொடுத்த ஏட்டு சின்னப்பையனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications