இடைத் தேர்தல்-திடீரென வாபஸ் வாங்கிய தேமுதிக வேட்பாளர்
கம்பம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில், போட்டியிலிருந்து திடீரென வாபஸ் பெற்றுவிட்டார் தேமுதிக வேட்பாளர். அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று விஜயகாந்துக்கு தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினராக இருந்தவர் சையது மீரான். இவர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். அவர் சமீபத்தில் இறந்து போனதால் அந்த வார்டுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது
சையது மீரானின் மகன் அப்துல் காசிம் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அழகு சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் உத்தமபாளையம் நகரச் செயலாளர் அபுபக்கர் களம் இறக்கப்பட்டார்.
இந் நிலையில் தனது வேட்பு மனுவை திடீரென வாபஸ் பெறுவதாக தேமுதிக வேட்பாளர் அபுபக்கர் அறிவித்தார்.
இந்த தகவல் கிடைத்த உடன் தேமுதிக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கூடி ஆலோசனை நடத்தினர். அதில், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக வேட்பு மனுவை வாபஸ் பெற்ற அபுபக்கரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அபுபக்கர் போட்டியிலிருந்து விலக உடந்தையாக இருந்த மாவட்டச் செயலாளர் முருகேசனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இவர்கள் இருவரும் மாற்று கட்சியினரிடம் பணம் வாங்கிக் கொண்டு கட்சியை அழித்து விட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications