மணந்த மறு நாளே பிரிக்கப்பட்ட காதல் ஜோடி!
முதுகுளத்தூர்: ஊரை விட்டு ஓடி வந்து கோவிலில் கல்யாணம் செய்து கொண்ட காதல் ஜோடியை, பெண்ணின் பெற்றோர் பிரித்து தங்களது ஊருக்கு அழைத்துச் சென்ற சம்பவம் முதுகுளத்தூரில் நடந்தது.
திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகரன் திருப்பூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருச்சியைச் சேர்ந்த சுகப்பிரியாவை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்கவில்லை. இதையடுத்து முதுகுளத்தூருக்கு வந்து நண்பர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் அங்குள்ள சுப்பிரமணியர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து சுகப்பிரியாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் முதுகுளத்தூர் வந்தனர். சுகப்பிரியாவை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்துக் கொண்டு பஸ் நிலையம் சென்றனர்.
பின்னாலேயே வந்த சந்திரசேகரன், சுகப்பிரியாவை இப்போது என் மனைவி, அவரை அனுப்ப மாட்டேன் என மறுத்தார். அதேபோல சுகப்பிரியாவும் குடும்பத்தினருடன் போக மறுத்தார். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுகப்பிரியாவின் பெற்றோர் தங்களுடன் மகளை அனுப்பி வைக்குமாறு கூறி கண்ணீர் விட்டு கதறினர்.
அவர்களது அழுகையைப் பார்த்து பார்த்து உருகிய சந்திரசேகரன், சுகப்பிரியாவை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் சுகப்பிரியா கண்ணீர் மல்க பெற்றோருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
நொந்து போனபடி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீருடன் கிளம்பிச் சென்றார் சந்திரசேகரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications